×

இரும்புலி மற்றும் பொலம்பாக்கம் ஊராட்சிகளில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

செய்யூர்: இரும்புலி மற்றும் பொலம்பாக்கம் ஊராட்சிகளில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் திறப்பு விழா நடந்தது.செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த பருவமழையின்போது கனமழை பெய்தது. இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகள், குளங்கள் நிரம்பி வழிந்தன. இதனால், மகிழ்ச்சியடைந்த விவசாயிகள் ஆர்வமுடன் நெற்பயிர்களை நடவு செய்தனர். இதையொட்டி, அறுவடைக்கு தயாரான நெற்பயிர்களின் அறுவடை சீசன் செய்யூர், சித்தாமூர், சூனாம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் வீச்சில் நடந்து வருகிறது. இதனால், அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்ய நேரடி கொள்முதல் நிலையங்கள் ஏற்படுத்த தர வேண்டும் என விவசாயிகள், தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதைதொடர்ந்து, விவசாயிகள் நலனை கருதி செங்கல்பட்டு மாவட்டத்தில் திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைத்து, விவசாயிகளிடம் நேரடி நெல் கொள்முதல் செய்ய மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்தது. இதையடுத்து சித்தாமூர் ஒன்றியம் இரும்புலி, பொலம்பாக்கம் ஆகிய ஊராட்சிகளில் திறந்தவெளி நெல் கொள்முதல் நிலைய திறப்பு விழா நந்தது. சித்தாமூர் ஒன்றியக்குழு தலைவர் ஏழுமலை நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து வைத்து விவசாயிகளிடம் நேரடி நெல் கொள்முதலை தொடங்கி ைவத்தார்.
நிகழ்ச்சியில், மாவட்ட கவுன்சிலர் குணா, ஊராட்சி மன்ற தலைவர்கள் (இரும்புலி)  சூரியகலா, (பொலம்பாக்கம்) சிவக்குமார், ஒன்றிய கவுன்சிலர் நாகப்பன், ஊராட்சி மன்ற கூட்டமைப்பு தலைவர் நிர்மல்குமார், ஒன்றிய நெசவாளர் அணி அமைப்பாளர் முருகானந்தம், மண்டல மேலாளர் சத்தியவதி, துணை மண்டல மேலாளர்கள் அருண், லியோ உள்பட விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : Irumbuli ,Polambakkam , In the Iron Tiger and Polambakkam panchayats Opening of Paddy Procurement Station
× RELATED கிராம தார் சாலை தரம் இல்லையென கூறி...