×

துபாய் டென்னிஸ் சாம்பியன் ஷிப்: ஜெலினா-வெரோனிகா பைனலில் இன்று மோதல்

துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் மகளிருக்கான துபாய் டூட்டி ஃப்ரீ டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில், லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டாபென்கோ 2-6,7-6,6-0 என்ற செட் கணக்கில் ருமேனியாவின் சிமோனா ஹாலெப்பை வீழ்த்தினார். மற்றொரு அரையிறுதியில் செக்குடியரசின் மார்கெட்டா வோண்ட்ரூசோவா காயம் காரணமாக விலகியதால் ரஷ்யாவின் வெரோனிகா குடெர்மெடோவா இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.

இன்று இரவு 8.30 மணிக்கு நடைபெறும் பைனலில், ஜெலினா ஆஸ்டாபென்கோ -வெரோனிகா குடெர்மெடோவா மோதுகின்றனர். இரட்டையர் பிரிவு அரையிறுதியில், இந்தியாவின் சானியா மிர்சா, செக்குடியரசின் லூசி ஹ்ரடேக்கா ஜோடி, 6-2,2-6,7-10 என்ற செட் கணக்கில், லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டாபென்கோ , உக்ரைனின லியூட்மிலா ஜோடியிடம் தோல்விஅடைந்தது.

Tags : Dubai Tennis Championship ,Jelena ,Veronica , Dubai Tennis Championship: Jelena-Veronica clash in final today
× RELATED 2வது முறையாக தேர்வில் தோல்வி பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை