×

மேட் ஹென்றி வேகத்தில் தென் ஆப்ரிக்கா 95 ரன்னுக்கு ஆல் அவுட்

கிறிஸ்ட்சர்க்: நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்ரிக்கா அணி 2 ஆட்டங்களை கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. நியூசிலாந்துக்கு எதிராக ஒரு டெஸ்ட் தொடரைக்  கூட இதுவரை தெ.ஆப்ரிக்கா இழந்ததில்லை. கூடவே சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து தோற்கடிக்க முடியாத ஒரே அணியாக தெ.ஆப்ரிக்கா உள்ளது. இந்நிலையில் முதல் டெஸ்ட் நேற்று கிறிஸ்ட் சர்ச் நகரில் தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன்  எல்கரை ஒரு ரன்னில் வெளியேற்றினார் மேட் ஹென்றி. அதன் பிறகு தெ.ஆப்ரிக்கா வீரர்கள் பெவிலியன் நோக்கி அணிவகுப்பு நடத்தியதால் தெ.ஆப்ரிக்கா முதல் இன்னிங்சில் 49.2 ஓவருக்கு வெறும் 95ரன்னுக்கு சுருண்டது. அணியில் அதிகபட்சமாக ஜூபைர்  25 எடுத்தார்.

நியூசி வேகங்களில் மாட் ஹென்றி 7 விக்கெட் அள்ள, சவுத்தீ, ஜேமிசன், வாக்னர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். நியூசிக்கு எதிராக டெஸ்ட் இன்னிங்சில் தெ.ஆப்ரிக்கா எடுத்த குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும். பின்னர் நியூசி முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியும் தெ.ஆப்ரிக்க வேகத்தை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. தொடக்க ஆட்டக்காரர்கள் யங் 8, கேப்டன் லாதம் 15, டெவன் கான்வே 36ரன்னில் வெளியேறினர். அதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசி 39ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 116ரன் எடுத்தது. நிகோலஸ் 37*, வாக்னர் 2* ரன்னுடன் களத்தில் உள்ளனர். தெ.ஆப்ரிக்கா தரப்பில் வேகங்கள் ஆலிவர் 2, மார்கோ  ஒரு விக்கெட் எடுத்தனர். நியூசி 21ரன் முன்னிலையில், இன்னும் 7 விக்கெட்கள் கைவசம் இருக்க 2வது நாளான இன்று முதல் இன்னிங்சை தொடர்ந்து விளையாடும்.

Tags : South Africa ,Matt Henry , South Africa all out for 95 at the pace of Matt Henry
× RELATED இந்தியா – தென் ஆப்ரிக்கா இடையே...