33வது வார்டு திமுக வேட்பாளர் குணசுந்தரி குட்டி மோகனை ஆதரித்து சுதர்சனம் எம்எல்ஏ தீவிர பிரசாரம்

புழல்: மாதவரம் மண்டலம் 33வது வார்டில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் குணசுந்தரி குட்டி மோகனை ஆதரித்து நேற்று சுதர்சனம் எம்எல்ஏ திறந்த ஜீப்பில் லட்சுமிபுரம், நேதாஜி தெரு, வ.உ.சி தெரு, விவேகானந்தா தெரு, காமராஜர் தெரு, கடப்பா சாலை, சாரதி நகர், ஆதிலட்சுமி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒவ்வொரு வீடு வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரித்தார். அப்போது, வேட்பாளருக்கு பொதுமக்கள் வீடுகள் தோறும் ஆரத்தி எடுத்து தேங்காய் உடைத்து வெற்றித் திலகமிட்டு வரவேற்றனர். பின்னர் மாலை, சால்வை அணிவித்தனர்.

இந்த உற்சாக வரவேற்பில் மாதவரம் சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ எஸ்.சுதர்சனம் பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டு திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ள வாக்குறுதிகளான ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டது, அரசு நகரப் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம், பொதுமக்களின் மனுக்கள் மீது தீர்வுக்காண உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை, பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டது, அரசுப்பணிகளில் மகளிருக்கான இட ஒதுக்கீடு 40 சதவீதமாக உயர்வு போன்ற திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ள சாதனைகளை விளக்கி கூறி வேட்பாளர் குணசுந்தரி குட்டி மோகனை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். இதில் திமுக மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.   

Related Stories: