×

சாவிலும் இணை பிரியாத தம்பதி கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் சாவு

திருவாரூர்: திருவாரூர் அருகே பள்ளிவாரமங்கலத்தை சேர்ந்தவர் பக்கிரிசாமி (85). மனைவி சந்திரா (80). இவர்களுக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர். மகள்களுக்கு திருமணமாகி விட்டது. இதனால் பள்ளிவாரமங்கலத்தில் வசித்து வரும் மகன் சிவசுப்பிரமணியன் வீட்டில் தம்பதியினர் வசித்து வந்தனர்.

முதியவர் பக்கிரிசாமி உடல்நல குறைவால் கடந்த 12ம் தேதி இரவு இறந்தார். கணவர் இறப்பை தாங்க முடியாமல் சந்திரா சோகத்தில் மூழ்கினார். இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்டு மறுநாள் சந்திராவும் இறந்தார். இதையடுத்து தம்பதியினரின் இறுதி சடங்குகள், அங்குள்ள இடுகாட்டில் நேற்று ஒன்றாக நடந்தது. கணவர் இறந்த சோகத்தில் மனைவியும் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



Tags : Chav , Death, inseparable, couple
× RELATED யூடியூபர் சவுக்கு சங்கருக்கு ஒருநாள் காவல்: கோவை நீதிமன்றம் உத்தரவு