×

கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை

மதுராந்தகம்: கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகரைச் சேர்ந்தவர் விசித்ரா(28). இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் 2 ஆண் குழந்தைகளுடன் அதே பகுதியில் வசித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த திருமணமாகாத வாலிபர் தியாகராஜன்(34). இந்நிலையில், விசித்ராவுக்கும், தியாகராஜனுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இவர்களின் கள்ளக்காதல் விவகாரத்தை அறிந்த இருதரப்பு குடும்பத்தினர் கடுமையாக கண்டித்தனர்.

இந்நிலையில், விசித்ரா, தியாகராஜன் ஆகியோர் வீட்டில் இருந்து வெளியேறி சென்னைக்கு பைக்கில் புறப்பட்டு வந்தனர். திண்டிவனம்-சென்னை தேசிய நெடுஞ்சாலை மதுராந்தகம் அடுத்த பாக்கம் எனும் இடத்தில் வரும்போது இருவருக்கும் மன உறுத்தல் ஏற்பட்டு குடும்பத்தினரை நினைத்து வருந்தினர். தனது குழந்தைகளையும், கணவனையும் விட்டு பிரிந்ததை எண்ணி விசித்ரா வேதனை அடைந்தார். இதையடுத்து, இருவரும் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தனர்.

பின்னர், அப்பகுதியில் உள்ள கோயில் அருகே பைக்கை நிறுத்திவிட்டு இருவரும் விஷம் குடித்து மயங்கினர். தகவல் அறிந்து வந்த மதுராந்தகம் போலீசார் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இருவரையும் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுதொடர்பாக கடலூரில் உள்ள இருதரப்பு குடும்பத்தினருக்கும் போலீசார் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து விரைந்து வந்த இருதரப்பு குடும்பத்தினர் விருப்பத்தின்பேரில், மேல்சிகிச்சைக்காக பாண்டிச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி விசித்ரா, தியாகராஜன் ஆகியோர் நேற்று மாலை பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து, மதுராந்தகம் போலீசார் விசாரிக்கின்றனர்.

The post கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Visitra ,Nellikuppam ,Cuddalore district ,Thiagarajan ,Vichitra ,
× RELATED நெல்லிக்குப்பம் ஆலை ரோடு பகுதியில் ...