×

திமுக வரலாற்றில் மதுரையும், மதுரை வரலாற்றில் திமுகவும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பினைந்தவை: காணொலி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பரப்புரை

சென்னை: மதுரை மாவட்ட திமுக வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளியில் மூலம் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். திமுக, கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மதுரை மாவட்டத்தில்  திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் காணொலி பரப்புரையை காண மதுரை மாவட்டத்தில் 200 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்துக்கான வளர்ச்சி திட்டங்களை பட்டியலிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்து வருகிறார். மேலும் அதிமுக ஆட்சியின்போது மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஏராளமான ஊழல்கள் நடைபெற்றுள்ளது என அவர் கூறினார். மதுரையை லண்டன், சிங்கப்பூராக மாற்றுவதாக கூறி அதிமுக ஆட்சியர்கள் ஏற்கனவே இருந்த மதுரையை சீரழித்தனர் என முதல்வர் கூறியுள்ளார். அதிமுக ஆட்சியில் தலைமை செயலகத்திலேயே வருமான வரி சோதனை நடந்தது. மாநில உரிமைகளை டெல்லிக்கு அடகு வைத்தது அதிமுக அரசு என குற்றம் சாட்டினர். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது இளைஞர்கள் மீது அதிமுக அரசு தடியடி நடத்தியது.

மதுரைக்கு அறிவித்த மோனோ ரயில் திட்டம் எங்கே என கேள்வி எழுப்பினார். அரசியல் அமாவாசைகள் யார் என்பது அறிந்தே மக்கள் வாக்களித்துள்ளனர். அதிமுகவினருக்கு ஆக்கப்பூர்வ அரசியல் தெரியாது என கூறினார். தென் தமிழகத்திற்கு தலைநகரம் போல இருக்கிறது மதுரை. மதுரைக்கு பல்வேறு திட்டங்களை உருவாக்கி கொடுத்த ஆட்சி திமுக ஆட்சி என தெரிவித்தார். மதுரையில் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என கூறினார்.

திமுக வரலாற்றில் மதுரையும், மதுரை வரலாற்றில் திமுகவும் ஒன்றோடு ஒன்று பின்னப் பிணைந்தவை எனவும் திமுக வரலாற்றில் எத்தனையோ தியாக மறவர்களை இந்த மண் வழங்கியுள்ளது எனவும் முதல்வர் கூறியுள்ளார். 197-ல் நகராட்சியாக இருந்த மதுரையை மாவட்டமாக மாற்றம் செய்ததும் மதுரையில் உயர்நீதிமன்ற கிளை அமைய அடித்தளம் இட்டதும் கலைஞர் தான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரையில் கூறியுள்ளார். மேலும் பரப்புரையின் போது குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகை ரூ.1,000 நிச்சயம் வழங்கப்படும் என முதல்வர் கூறியுள்ளார்.

Tags : Maduru ,Dimuga ,Dimukha ,Madurai ,KKA Stalin , DMK, History, Madurai, MK Stalin
× RELATED தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்...