×

வெயிலின் தாக்கத்தால் மின்சார தேவை அதிகரித்துள்ள நிலையில் டான்ஜெட்கோ தலைவர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் வெயில் கொளுத்தி வரும் நிலையில், தடையில்லா, சீரான மின்சாரம் வழங்குவதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கத்தால் மின்சார தேவை அதிகரித்துள்ள நிலையில், டான்ஜெட்கோ தலைவர் தலைமையில் அலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

சென்னை மாவட்டத்தின் உச்சபட்ச மின்தேவை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்து 4,769 மெ.வாட் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு மின்தேவை 20,830 மெ.வாட் என்ற புதிய உச்சத்தை கடந்த மாதம் 2-ம் தேதி எட்டியது.

மின்தேவை புதிய உச்சத்தை எட்டியபோதும் எந்தவித பற்றக்குறையும் இல்லாமல் சீராண மின் விநியோகம் செய்யப்பட்டது. கோடை வெயிலின் தாக்கம் காரணமாக மின்மாற்றி, புதைவடக் கம்பிகள், மின்கம்பிகளில் ஏற்படும் பழுதால் சில இடங்களில் மின்தடை ஏற்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. மின்தடை ஏற்படும்போது உடனுக்குடன் சரிசெய்து தடையில்லா மின்சாரம் வழங்க அதிகாரிகளுக்கு டான்ஜெட்கோ உத்தரவிட்டுள்ளது.

The post வெயிலின் தாக்கத்தால் மின்சார தேவை அதிகரித்துள்ள நிலையில் டான்ஜெட்கோ தலைவர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : president ,Tanjetco ,Chennai ,Tamil Nadu ,Alosan ,Tanjetko ,Dinakaran ,
× RELATED வெயிலின் தாக்கத்தால் மின்சார தேவை...