×

அரசு பள்ளி மாணவர்களுக்கு எட்டாக்கனியாக உள்ள மருத்துவ படிப்பை எட்டும் நிலையை ஏற்படுத்த முதல்வருக்கு கே.எஸ்.அழகிரி கோரிக்கை

சென்னை: எட்டாக்கனியாக உள்ள மருத்துவ படிப்பை, அரசு பள்ளி மாணவர்களுக்கு எட்டும் நிலையை ஏற்படுத்த வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், நீட் தேர்வால் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள், ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். சிபிஎஸ்இ, தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு வாய்ப்பு அதிகமாக கிடைக்கும் அநீதி நடைபெறுகிறது. புள்ளிவிவரங்களின் படி, கடந்த 15 ஆண்டுகளில் அரசு பள்ளி மாணவர்களே மருத்துவக் கல்லூரியில் சாதித்துள்ளனர். கடந்த 2018- 19, 2019 – 20 ஆண்டுகளில் அரசு பள்ளிகளில் படித்த 700 மாணவர்களுக்கு இடம் கிடைத்தாலும் 9 மாணவர்களுக்கு மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. இவ்வாறு நீட் தேர்வினால் அநீதி அதிகரித்துள்ளது. இதற்காக 7.5 சதவீத இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டும் அரசுப் பள்ளியில் படிக்க 405 மாணவர்களுக்கு மட்டுமே இடம் கிடைத்தது. உள் ஒதுக்கீடு காரணமாக 3400 இடங்களில், 405 மாணவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்துள்ளது. இத்தகைய அநீதியை போக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. அநீதியை போக்குவதற்கான முயற்சிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுக்க வேண்டும். நீட் தேர்வுக்கு மாற்றாக எதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்துவது என்பது குறித்து ஆலோசித்து அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்….

The post அரசு பள்ளி மாணவர்களுக்கு எட்டாக்கனியாக உள்ள மருத்துவ படிப்பை எட்டும் நிலையை ஏற்படுத்த முதல்வருக்கு கே.எஸ்.அழகிரி கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : K.S.Azhagiri ,Chief Minister ,CHENNAI ,M.K.Stalin ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...