×

வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒரு ஜோடி அரிய வகை அணில், குரங்குகள் திருட்டு: ஏா்போர்ட், துறைமுகங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு

வண்டலூர்: வண்டலூர் உயிரியல் பூங்காவில் அரிய வகை அணில், குரங்குகள் திருடப்பட்டுள்ளது உயிரியல் பூங்காவில் பாதுகாப்பு கேள்விகுறியாக்கியுள்ளது. சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவில் 2 நாட்களுக்கு முன்பாக அரிய வகை அணில், இருந்த கூண்டின் கம்பிகள் வெட்டப்பட்டு ஒரு ஜோடி குரங்குகள் திருடப்பட்டுள்ளன. இதையடுத்து பூங்கா அதிகாரிகள் போலீசாரிடம் புகார் அளித்த நிலையில் சிசிடிவி பதிவுகளைக் கொண்டு போலீசார் விசாாணை நடத்தி வருகின்றனர். தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த நீண்ட வாலை பெற்றுள்ள அணில், குரங்கு தொல்பட்டை வரை வாலை உயர்த்தும் தன்மை கொண்டதால் காண்போரை வசிகரிக்கும் தோற்றம் கொண்டதாக விலங்குகிறது.

கடந்த 2018-ம் ஆண்டு சென்னையில் பறிமுதல் செய்யப்பட்டு வந்த குரங்குகள் திருடப்பட்டதால் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட வாய்ப்பு உள்ளதாக கூறும் போலீசார் விமான நிலையம், துறைமுகங்கலில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அரிய வகை குரங்குகள் திருடப்பட்டுள்ளதன் எதிரொலியாக பூங்காவிற்கு வருகை தரும் பார்வையாளர்கள் மாலை 5 மணிக்கு வெளியேர வேண்டும் என புதிய விதியை பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. ஏற்கனவே புள்ளி புறா, காட்டுக் கோழி, வெள்ளைக்கிளி போன்ற பறவைகள் திருடப்போன நிலையில் தற்போது ஒரு ஜோடி அணில், குரங்குகள் திருடப்பட்டுள்ளது உயிரியல் பூங்காவில் பாதுகாப்பை கேள்விகுறியாக்கியுள்ளது.


Tags : Vandalur Zoo , Vandalur Park, Squirrel, Monkeys, Theft
× RELATED வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கம்,...