×

17 பேர் களமிறங்கிய மாநகராட்சி வார்டு

சேலம்: சேலம் மாநகராட்சி 44வது வார்டில் 17 பேர் களத்தில் உள்ளதால், அந்த வார்டுக்குட்பட்ட 11 வாக்குச்சாவடிகளில் 2 வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர் சின்னத்துடன் பேலட் பேப்பர் பொருத்தப்படுகிறது. சேலம் மாநகராட்சியில், மொத்தமுள்ள 60 வார்டுகளில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 60 வார்டுகளில் 618 பேர் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக  அம்மாப்பேட்டை மண்டலம் 44வது வார்டில் 17 பேர் போட்டியிடுகின்றனர். மற்ற 59 வார்டுகளில் வேட்பாளர்கள் 16 பேருக்குள் தான் உள்ளனர். இதனால் இந்த வார்டுகளில் ஒரு வாக்குப்பதிவு மின்னணு இயந்திரத்தில் வேட்பாளர் பெயர், சின்னத்துடன் பேலட் பேப்பர் பொருத்தப்படுகிறது.

ஆனால் 17வது வார்டில் 17 பேர் போட்டியிடுவதால், அந்த வார்டில் மட்டும் 2 வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. மேலும், இந்த வார்டில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர்கள் 3 பேர் அசைந்தாடும் நாற்காலியும், வைரம், தண்ணீர் குழாய் சின்னம் வேண்டும் என தெரிவித்தனர். இதையடுத்து  குலுக்கல் முறையில் 3 சுயேச்சைகளுக்கு சின்னம் ஒதுக்கப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘சேலம் மாநகராட்சி 44வது வார்டில் 17 பேர் போட்டியிடுவதால், அந்த வார்டில் மட்டும் 2 வாக்குப்பதிவு மின்னணு இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. அதுவும் அந்த வார்டில் உள்ள 11 வாக்குச்சாவடிகளிலும் மட்டும் இந்த 2 வாக்குப்பதிவு மின்னணு இயந்திரம் வைக்கப்படும்,’’ என்றார்.

Tags : Corporation ward with 17 fielders
× RELATED நடப்பு பருவத்திற்கு தேவையான உரம்...