×

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க போலீசார் கொடி அணிவகுப்பு-கொரடாச்சேரியில் எஸ்பி பங்கேற்பு

திருவாரூர் : திருவாரூரில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் போலீசார் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலானது வரும் 19ம் தேதி நடைபெற உள்ளதையொட்டி மாநில தேர்தல் ஆணையத்தின் மூலம அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களான கலெக்டர்கள் மூலம் முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் மாவட்டத்திற்கு ஒரு தேர்தல் பார்வையாளர் மற்றும் வட்டார பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டு தேர்தல் தொடர்பான விபரங்கள் மற்றும் புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பொதுமக்கள் எவ்வித அச்சமுமின்றி வாக்களிக்கும் வகையில் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலின்போது பாதுகாப்பு பணியில் ஈடுபடும் துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்துவது வழக்கம். அதன்படி நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலிலும் போலீசார் மூலம் மாநிலம் முழுவதும் கொடி அணிவகுப்பு நடைபெற்று வருகிறது.

இதனையொட்டி திருவாரூர் மாவட்டத்திலும் நடைபெற்று வரும்நிலையில் மாவட்டத் தலைநகரான திருவாரூரில் நேற்று புதிய ரயில் நிலையத்திலிருந்து போலீசார் கொடி அணிவகுப்பு துவங்கி பழைய பஸ் நிலையம், பனகல் சாலை, தெற்கு வீதி வழியாக டவுன் போலீஸ் ஸ்டேஷனை அடைந்து முடிவுற்றது. டவுன் டிஎஸ்பி சிவராமன் தலைமையில் நடைபெற்ற இந்த கொடி அணிவகுப்பில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், டவுன் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் கலந்துகொண்டனர்.

இதே போல் மாலையில் கொரடாச்சேரி பகுதியில் நடைபெற்ற போலீசாரின் கொடி அணிவகுப்பினை மாவட்ட எஸ்.பி விஜயகுமார் துவக்கி வைத்தார். இதில் ஏடிஎஸ்பி அன்பழகன், ஏஎஸ்பி., ஸ்டாலின் உள்ளிட்ட போலீசார் பங்கேற்றனர்.

முத்துப்பேட்டை:

முத்துப்பேட்டையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறுவதையடுத்து போலீசார் பல்வேறு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் நேற்று போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம் முத்துப்பேட்டை டிஎஸ்பி வெள்ளத்துரை தலைமையில் நடந்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் ஊர்வலமாக பழைய, புதிய பஸ் நிலையம், பெரிய கடை தெரு, முக்கிய சாலைகள் மற்றும் வீதிகளில் இந்த கொடி அணிவகுப்பாக சென்று வந்தனர்.

வலங்கைமான்:
பேரூராட்சி தேர்தலையடுத்து வலங்கைமானில் இன்ஸ்பெக்டர் விஜயா தலைமையில் காவல்துறையினர் கடைவீதியில் பாதுகாப்பு அணிவகுப்பு நடத்தினர்.

Tags : Koradacheri , Thiruvarur: Police flag parade was held in Thiruvarur so that the public can vote without fear. Urban local government in Tamil Nadu.
× RELATED தமிழ்நாட்டுக்கு எதையும் தராத...