×

ஊட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கோடை மழை

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை மழை பெய்யாத நிலையில் வரலாறு காணாத வெப்பம் கொளுத்தியது. கடந்த சில நாட்களுக்கு முன் சுமார் 73 ஆண்டுகளுக்கு பிறகு ஊட்டி அதிகப்பட்சமாக 84.2 டிகிரி வெயில் பதிவானது. இந்நிலையில், கடந்து 2 நாட்களாக ஊட்டி மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நேற்று ஊட்டியில் பிற்பகல் சிறிது நேரம் மழை பெய்தது. இதனால், ஊட்டி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் குளிர்ந்த காற்று வீசியது. சமவெளி பகுதியில் வெயிலில் வாடி வந்த பொது மக்களுக்கு இந்த குளிரான காலநிலை பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல் உள்ளூர் மக்களுக்கும் இந்த மழை மகிழ்ச்சி ஏற்படுத்தியது. இதேபோல் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் கோடை மழை பெய்தது.

The post ஊட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கோடை மழை appeared first on Dinakaran.

Tags : Ooty ,Nilgiris district ,Dinakaran ,
× RELATED சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்ட நகரின்...