×

திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து வேட்புமனுவை திரும்ப பெற்ற தேமுதிக வேட்பாளர்கள்: துறைமுகம் தொகுதியில் பரபரப்பு

சென்னை: துறைமுகம் தொகுதிக்கு உட்பட்ட 56 மற்றும் 60வது வார்டில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த தேமுதிக வேட்பாளர்கள், நேற்று தங்களது வேட்பு மனுவை வாபஸ் பெற்று, திமுக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்தனர். சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக திமுக, அதிமுக, தேமுதிக, காங்கிரஸ், பாஜ, பாமக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்தனர். நேற்று வேட்பு மனு வாபஸ் பெறும் நாள் என்பதால், சுயேச்சை மற்றும் பிரதான அரசியல் கட்சிகளின் மாற்று வேட்பாளர்கள் மனுக்களை வாபஸ் பெற்றனர்.இந்நிலையில், துறைமுகம் தொகுதிக்கு உட்பட்ட 56வது வார்டில் தேமுதிக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த ராஜா, நேற்று தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றார். மேலும், திமுக சார்பில் போட்டியிடும் பரிமளத்திற்கு ஆதரவு தெரிவித்து, தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார்.

இதேபோல், 60வது வார்டில் தேமுதிக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த சர்தார், நேற்று வேட்பு மனுவை வாபஸ் பெற்று, திமுக வேட்பாளர் ஆசாத்திற்கு ஆதரவு தெரிவித்து, தன்னை திமுகவில் இணைந்துக்கொண்டார். துறைமுகம் தொகுதி தேமுதிக வேட்பாளர்கள் இருவர், திமுக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து திமுகவில் இணைந்த நிகழ்ச்சியில், துறைமுகம் பகுதி செயலாளர் ராஜசேகர் மற்றும் திமுக வேட்பாளர்கள், கட்சியினர் உடனிருந்தனர்.

Tags : Temujin ,DMK , Temujin candidates who withdrew their nominations in support of DMK candidates: Tension in the port constituency
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி