×

நார்த்தாமலை ஆளுருட்டி மலைப்பகுதியில் பழமையான பாறை ஓவியம் கண்டுபிடிப்பு

விராலிமலை : நார்த்தாமலை ஆளுருட்டி மலைப்பகுதியில், பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலையில், ஆளுருட்டி மலை கடம்பர் மலை, கோட்டை மலை, மேல மலை ஊரமலை போன்ற மலைகள் காணப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், மூத்ததொல்லியல் ஆர்வலர் பாலபாரதி என்பவரால், ஆளுருட்டி மலையின் கீழ்பகுதியில் உள்ள குகைத்தளத்தில், நட்சத்திர கூட்டத்தை குறிக்கும் வெண்சாந்து ஓவியங்கள் பதிவு செய்யப்பட்டது.

தற்போது,ஆளுருட்டி மலையின் மேற்பகுதியிலும் பாறை ஓவியங்கள் வரையப்பட்டிருப்பது தொல்லியல் ஆர்வலர்கள் களஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ஆளுருட்டி மலையின், உச்சிப் பகுதியை நோக்கி செல்லும் பாதையின் நடு மலைப்பகுதியில், புதர்மண்டிய நிலையில், ஒரு குகை போன்ற பகுதியில், பாண்டியநாடு பண்பாட்டு மையத்தைச் சேர்ந்த தொல்லியல் ஆர்வலர்களான கீரனூர் முருகபிரசாத், நாராயணமூர்த்தி, ராகுல் பிரசாத் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டதில், குகைப்பகுதியின் தென்புறம் செஞ்சாந்து ஓவியங்கள் சேதமடைந்த நிலையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த ஓவியங்களின் பின்புறம் உள்ள, சொரசொரப்பான பாறையின் மேல், ஒருவிதமான வழவழப்பான திரவம் பூசப்பட்டு, அதன்மேல் பளிச்சென்று தெரியும் வண்ணம் இந்த ஓவியங்கள் வரையப் பட்டிருக்கிறது. ஆனால் தற்போது இயற்கையினாலும்,மனித செயல்பாடுகளினாலும், அந்த ஓவியங்களின் பெரும்பகுதி சிதிலமடைந்து காணப்படுகிறது. மேலும், முத்த தொல்லியல் ஆர்வலர் பாலபாரதியால் பார்வையிடப்பட்ட, அந்த ஓவியங்கள் குறியீட்டு வகை ஓவியங்கள் எனவும், ஆளுருட்டிமலையின் கீழ்ப்பகுதியில் உள்ள வெண்சாந்து ஓவியத்தை விட பன்மடங்கு (பல்லாயிரம் ஆண்டுகள்) காலத்தால் பழமையானது எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags : Aluruti ,Northamalai , Viralimalai: Thousands of years old rock paintings have been found in the Alurutti hills of Northamalai.
× RELATED புதுக்கோட்டையில் நார்த்தாமலை...