×

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட 35 லட்சம் பறிமுதல்

சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்தில்  நேற்று ரயில்வே பாதுகாப்பு படை  இன்ஸ்பெக்டர் சிவனேசன் தலைமையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஐதராபாத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு சிறப்பு ரயில் ஒன்று வந்தது. அந்த ரயிலின் எஸ்.10 பெட்டியில் இருந்து இறங்கிய பயணி ஒருவர் சந்தேகப்படும்படி நடந்து வந்துள்ளார். அவரை அழைத்து  அவர் கொண்டு வந்த பையை சோதனை செய்தபோது, அதில் 35,30,000 இருந்தது தெரியவந்தது. விசாரணையில், அவர் ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த மஞ்சுமர்த்தி சுப்பாராவ் என்பதும், உரிய ஆவணங்களின்றி பணத்தை சென்னைக்கு கொண்டு வந்ததும் தெரிந்தது. பின்னர் அந்த பணத்தையும், அவரையும் வருமான வரித்துறையிடம் ஒப்படைத்தனர்….

The post சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட 35 லட்சம் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Central Railway Station ,CHENNAI ,Inspector ,Sivanesan ,Railway Security Force ,
× RELATED சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குழந்தை கடத்தல்: இருவர் கைது