குன்னூர் மலை ரயில் பாதையில் குட்டியுடன் உலா வரும் காட்டு யானை

குன்னூர் : நீலகிரி  மாவட்டம் குன்னூர் மலை ரயில் பாதையில் பிறந்து ஒரு மாத  குட்டியுடன் காட்டு யானை முகாமிட்டுள்ளது.நீலகிரி மாவட்டம் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதை  ஹில்குரோ, ரன்னிமேடு ரயில் நிலையம்  இடையே  பிறந்து ஒரு மாதம் ஆன குட்டியுடன் யானை  கடந்த ஒரு மாத காலமாக முகாமிட்டுள்ளது.

அவ்வப்போது  மலை ரயில் பாதையில்  உலா வருவதும்  மலை ரயில் என்ஜினுக்கு ஊற்றக்கூடிய நீர் குழாய்களை  உடைத்து சேதப்படுத்தி வருகிறது.குட்டியுடன் உள்ளதால் வேறு பகுதிகளுக்கு செல்ல முடியாமல் அதே பகுதியில் முகாமிட்டுள்ளது.  காலை மற்றும்  மாலை நேரங்களில் அதே பகுதியில் உலா வருவதால் அங்கு பணிபுரியும் ஊழியா்கள் அச்சம் அடைந்துள்ளனர். மலைப்பாதையில் முகாமிட்டுள்ள காட்டு  யானையை விபத்து அபாயம் கருதி பாதுகாப்பாக வனபகுதிகளுக்கு விரட்ட நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: