ஜெயராம், செல்வராகவனுக்கு கொரோனா

சென்னை: நடிகர் ஜெயராம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘திடீரென்று என் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, உடனே மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டேன். எனக்கு கொேரானா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியானது. தற்போது தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறேன். அனைவரும் முகக்கவசம் அணி ந்து பாதுகாப்பாக இருங்கள்’ என்று கூறியுள்ளார்.

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் நேற்று வெளியிட்டுள்ள பதிவில், ‘எனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து என்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறேன். கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை பரிசோதித்துக் கொள்ள வேண்டுகிறேன்’ என்று தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு அவரது மனைவியும், இயக்குனருமான கீதாஞ்சலி ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார்.

Related Stories: