×

தேர்தல், கொரோனா விதிமீறல்: பிறந்த நாள் கொண்டாடிய பாஜக எம்பி மீது வழக்கு

 டேராடூன்: ரிஷிகேஷில் பிறந்த நாள் கொண்டாட ஏற்பாடு செய்திருந்த விவகாரத்தில் பாஜக எம்பி உள்ளிட்ட 50 பேர் மீது உத்தரகாண்ட் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். உத்தரகாண்ட் மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் தலைநகர் டேராடூனில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், உன்னாவ் தொகுதி பாஜக எம்பி சாக்‌ஷி மகராஜ் உட்பட 50 பேர் மீது பிரிவு 144 தடை மற்றும் கொரோனா வழிகாட்டுதல்களை மீறியதற்காக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘ரிஷிகேஷின் ரயில்வே சாலையில் உள்ள பகவான் பவன் ஆசிரமத்திற்கு பாஜக எம்பி சாக்‌ஷி மகாராஜ் வந்தார். அங்கு அவர் தனது பிறந்தநாளை கொண்டாட ஏற்பாடு செய்திருந்தார். அவரது ஆதரவாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் அங்க கூடினர். டேராடூனில் கடுமையான கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில், விதிமுறை மீறி பிறந்த நாள் கொண்டாட ஏற்பாடு செய்ததற்காக சாக்‌ஷி மகராஜ் உட்பட 50 பேர் மீது துணை ஆட்சியர் அபூர்வா பாண்டே கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்றனர்.

Tags : Corona ,BJP , Election, Corona irregularity, BJP MP, case
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...