தங்க கிரீடம் அமைச்சரிடம் ஒப்படைப்பு

சென்னை: மேட்டுப்பாளையம் அரங்கநாத சுவாமிகோயிலுக்கு கற்கள் பதித்திட்ட தங்கத்தினாலான பாண்டியக் கொண்டை (கிரீடம்) நன்கொடையாக அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலையில் சமர்பிக்கப்பட்டது.சென்னை நுங்கம்பாக்கம் ஆணையர் அலுவலகத்தில் கோவை மேட்டுப்பாளையம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலுக்கு கற்கள் பதித்திட்ட தங்கத்தினாலான பாண்டியக் கொண்டை(கிரீடம்) நன்கொடையாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலையில் திருக்கோயிலுக்கு ஒப்படைக்கப்பட்டது. இதை உபயமாக தொழிலதிபர் எம்.எம்.ராமசாமி மற்றும் திருக்கோயில் மிரசுதாரர் கே.ஆர்.கிருஷ்ணன் ஆகியோரால் அளித்தனர்.  இந்த தங்கத்தின் எடை 509.080 கிராம். இதன் மதிப்பு ரூ.26.42 லட்சம்.

Related Stories: