×

திருப்புடைமருதூர், பணகுடி கோயில்களில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

பாப்பாக்குடி : திருப்புடைமருதூர், பணகுடி கோயில்களில் தைப்பூச திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
நெல்லை மாவட்டம் திருப்புடைமருதூர் தாமிரபரணி நதிக்கரையில்  அமைந்துள்ளது ஸ்ரீ நாறும்பூநாதர் சுவாமி கோமதி அம்பாள் கோயில். பழமையான  மற்றும் பிரசித்தி பெற்ற சிவாலயமான இங்கு ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா  வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான தைப்பூச திருவிழா  நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நேற்று  காலை சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது.  தொடர்ந்து கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.

கொரோனா கட்டுப்பாடு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் எதிரொலியாக  பக்தர்கள் இன்றி கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது. கோயில் அலுவலர்கள்,  அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தைப்பூச  திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம், தைப்பூச தீர்த்தவாரி மற்றும்  தெப்பத்திருவிழா ஆகிய நிகழ்ச்சிகள் கொரோனா தொற்று பரவல் காரணமாக ரத்து  செய்யப்பட்டதாக கோயில் நிர்வாகம் தகவல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணகுடி: பணகுடி ராமலிங்க சுவாமி  உடனுறை  சிவகாமி அம்பாள் மற்றும் நம்பி சிங்க பெருமாள் கோயிலில்  தைப்பூச  திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. கொரோனா பரவல்  கட்டுப்பாடுகளால் பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் கோயில் பணியாளர்களுடன் வேத  விற்பன்னர்கள் மந்திரம் முழங்க கோயில் கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. விழா  நாட்களில் கோயில் வளாகத்தில்  காலை, மாலையில் சுவாமிக்கு சிறப்பு அலங்கார  பூஜையுடன் தீபாராதனை நிகழ்ச்சி நடைபெறும். கொடியேற்றத்தை யொட்டி பணகுடி  போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலெட்சுமி தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் மகேந்திரன்  உள்ளிட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags : Thaipusam festival ,Thirupudaimarudur ,Panakudi , Papakkudi: The Thaipusam festival started with the flag hoisting at Thirupudaimarudur and Panakudi temples yesterday. Devotees were denied permission.
× RELATED சாலை விபத்தில் படுகாயம் தூய்மை...