விசாகப்பட்டினத்தில் சுருக்குமடி வலை பிரச்சனையால் மீனவர்களிடையே மோதல்: 4 படகுகள் எரிப்பு

ஆந்திர பிரதேசம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே சுருக்குமடி வலை பயன்பாடு தொடர்பாக மீனவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 4 படகுகளுக்கு தீ வைக்கப்பட்டது. பதற்றத்தை தணிக்க விசாகப்பட்டினத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மீன்களை பிடிக்க நிர்ணயிக்கப்பட்ட அளவை விட சிறிய கண்ணிகளை கொண்ட சுருக்குமடி வலைகளை பயன்படுத்தினால் மீன்குஞ்சுகளும் அதில் சிக்குவதால் மீன்வளம் பாழாவதாக குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. இது தொடர்பான பிரச்சனை பல்வேறு மாநிலங்களிலும் உள்ள நிலையில், ஆந்திராவில் மீனவர்களிடையே பிரச்சனை வலுத்து வருகிறது.

விசாகப்பட்டினம் அருகே சுருக்குமடி வலைகளை பயன்படுத்தும் மீனவர்களுக்கும், சாதாரண வலைகளை பயன்படுத்தும் மீனவர்களுக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது.இதில் 4 படகுகளுக்கு தீ வைக்கப்பட்டது. இதில் 7 மீனவர்கள் காயமடைந்தனர். கடலோர காவல் படையினர் ஹெலிகாப்டர்களை அனுப்பி காயமடைந்த மீனவர்களை மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். அங்கு மீண்டும் மோதல் ஏற்படும் சூழல் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டு, 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.          

Related Stories: