×

நேபாளத்தில் பிரபலமாகி வரும் 'ஒட்டாக்கு ஜட்ரா'விழாவில் ஏராளமான இளைஞர்கள் வித விதமான அணிகலன்களுடன் பங்கேற்பு!!!

காத்மாண்டு: நேபாளம் நாட்டில் நடைபெற்ற காட்டூன் கதாபாத்திர ஆடை அலங்கார நிகழ்ச்சியை காண ஏராளமான இளைஞர்கள் திரண்டனர். நேபாளத்தில் ஒட்டாக்கு ஜட்ரா என்று அழைக்கப்படும் வருடாந்திர விழா 2016 ஆம் ஆண்டு முதல் பிரபலமடைந்து வருகிறது. இந்த விழாவில் இளைஞர்கள் பிரபலமாக உள்ள காட்டூன் கதாபாத்திரங்கள் போன்று வேடமணிந்து கலந்து கொள்வது வழக்கம். ஆண்டுதோறும் புத்தாண்டு முதல் வாரத்தில் நடைபெறக்கூடிய விழாவில் இந்த வருடமும் ஏராளமான இளைஞர்கள் காட்டூன் கதாபாத்திரங்கள் போன்று வேடமணிந்து மேடையில்
தோன்றினர்.

சிலர் கதாபாத்திரங்கள் போன்று நடித்தும் பார்வையாளர்களின் கரவொலியை பெற்றனர்.
திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள், வீடியோ கேம்ஸ் ஆகியவற்றில் பிரபலமாக உள்ள கதாபாத்திரங்களை போன்றே இளைஞர்கள் ஆடை, அணிகலன்களை அணிந்து விழாவில் பங்கேற்றனர். நேபாளத்தில் இளைஞர்களிடையே பிரபலமாகி வரக்கூடிய இந்த ஒருநாள் விழாவை காண நாடு முழுவதிலும் இருந்து நூற்றுக்கணக்கான இளைஞர்கள் நேபாளத்தில் திரண்டிருந்தனர்.       


Tags : Ottaku Jatra ,Nepal , Nepal, Camel Jatra, Youth, Diverse, Costume
× RELATED மரம் வளர்ப்போம்! பறவைகளை காப்போம்!...