கர்ப்பிணிகளுக்கு சமூக வளைகாப்பு விழா: வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ சீர்வரிசை வழங்கினார்

திருவள்ளூர்: திருவள்ளூர் தொகுதி, கடம்பத்தூர் வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட துறை சார்பில், ஸ்ரீதேவிகுப்பத்தில் கர்ப்பிணிகளுக்கு சமூக வளைகாப்பு விழா நேற்று நடந்தது. ஒன்றிய கவுன்சிலர் கே.திராவிடபக்தன், மாவட்ட கவுன்சிலர் சரஸ்வதி சந்திரசேகர், வட்டார வளர்ச்சி அலுவலர் எம்.ராம்குமார், வட்டார மருத்துவர் காந்திமதி முன்னிலை வகித்தனர். குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் எம்.இந்திரா வரவேற்றார். திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன், தலைமை வகித்து கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்கள் மற்றும் மதிய உணவு வழங்கி வாழ்த்தி பேசினார்.

விழாவில் மாநில விவசாய அணி துணை அமைப்பாளர் ஆர்.டி.இ.ஆதிசேஷன், கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.அரிகிருஷ்ணன், வி.ராஜசேகர், பி.கே.நாகராஜ், ஆர்.மோகனசுந்தரம், கொப்பூர் டி.திலிப்குமார், புட்ளூர் ஆர்.ராஜேந்திரகுமார், தா.குமார், அஸ்வின்காந்த், வாசு, ஊராட்சி மன்ற தலைவர்கள் தமிழ்ச்செல்வி ரமேஷ், கலையரசி, அறிவழகி ராஜி, ராஜேந்திரன், தனலட்சுமி பாண்டியன், விமலா மூர்த்தி, பெருமாள், ரவி, தர்மலிங்கம், கோபி, சேகர் மற்றும் ஊராட்சி நிர்வாகிகள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: