×

சீனாவிடம் இருந்து வாங்குகிறது பாக். ரபேலுக்கு போட்டியாக ஜே-10சி போர் விமானம்

இஸ்லாமாபாத்: இந்தியாவின் ரபேல் போர் விமானங்களுக்கு போட்டியாக, சீனாவிடம் இருந்து 25 அதிநவீன ஜே-10சி ரக போர் விமானங்களை பாகிஸ்தான் வாங்குகிறது. ராவல்பிண்டியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது, “அடுத்த ஆண்டு மார்ச் 23ம் தேதியன்று நடைபெறும் பாகிஸ்தான் தேசிய தின நிகழ்ச்சியில், சீனாவின் 25 ஜே-10சி ரக போர் விமானங்கள் இடம்பெறும்,’’ என தெரிவித்தார்.

பிரான்ஸ் நாட்டிடம் இருந்து இந்தியா 36 அதிநவீன ரபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்த பிறகு அது போன்று திறன் மிக்க போர் விமானங்களை வாங்குவதற்கு பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால், தனது ஆதரவு நாடான சீனாவிடம் இருந்து இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக 25, ஜே-10சி ரக போர் விமானங்களை பாகிஸ்தான் வாங்குகிறது.


Tags : Bach ,China ,Raphael , Bach buys from China. J-10C fighter to compete with Raphael
× RELATED சீனாவின் டிராகன் படகுத் திருவிழா கோலாகலம்..!!