×

மகரவிளக்கு பூஜைக்கு நடை திறப்பு: சபரிமலை எருமேலி பாதையில் இன்று முதல் பக்தர்கள் அனுமதி

திருவனந்தபுரம்: சபரிமலை மகரவிளக்கு பூஜைகளுக்காக ஐயப்பன் கோயில் நடை நேற்று திறக்கப்பட்டது. இன்று முதல் எருமேலி பெரிய பாதையில் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். சபரிமலை ஐயப்பன் ேகாயிலில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை கடந்த 26ம் தேதி நடந்தது. அன்று இரவு கோயில் நடை சாத்தப்பட்டு மண்டல காலம் நிறைவடைந்தது. 3 நாட்கள் இடைவெளிக்கு பின்னர் மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.

இன்று முதல் மகரவிளக்கு கால பூஜைகள் ெதாடங்குகிறது. இன்று அதிகாலை 4 மணிக்கு கோயில்நடை திறக்கப்படுகிறது. மகரவிளக்கு பூஜை 14ம் தேதி நடக்கிறது. அன்று மாலை பொன்னம்பல மேட்டில் மகரஜோதி தரிசனம் நடக்கும். ஜனவரி 20ம் தேதி காலை நடை சாத்தப்படும். 19ம் தேதி இரவு வரை மட்டுமே பக்தர்கள் தரசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

இதற்கிடையே, கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக மூடப்பட்டிருந்த எருமேலி பாதையில் இன்று முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதில் செல்வதற்கு நேர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எருமேலி கோழிக்கல் கடவு பகுதியில் இருந்து அதிகாலை 5.30 மணி முதல் காலை 10.30 மணி வரையிலும், அழுத கடவு மற்றும் முக்குழி பாதை வழியாக காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரையில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். மாலை 5 மணிக்கு பிறகு அனுமதி கிடையாது.

உணவு, சிகிச்சை வசதிகள்

* பெரிய பாதையில் செல்லும் பக்தர்களுக்காக வலியானவட்டம், கரிமலை மற்றும் கல்லிடும் குந்நு பகுதிகளில் பக்தர்கள் தங்குவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.

* வனத்துறை சார்பில் 8 இடங்களில் சிற்றுண்டி கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

* முக்குழி, கரிமலையில் மருத்துவமனைகள் திறக்கப்பட்டுள்ளன.

* மாம்பாடி உட்பட 4 இடங்களில் அவசர சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Tags : Makaravilakku Puja ,Sabarimala Erumeli , Opening of the walk for Makaravilakku Puja: The first devotees are allowed on the Sabarimala Erumeli path from today
× RELATED எருமேலியில் பேட்டை துள்ளல்