×

எருமேலியில் பேட்டை துள்ளல்

திருவனந்தபுரம்: மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலையில் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணம் பந்தளத்திலிருந்து இன்று ஊர்வலமாக கொண்டு வரப்படுகிறது. சபரிமலையில் இவ்வருட மகரவிளக்கு காலம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வரும் 15ம் தேதி மகரவிளக்கு பூஜையும், அன்று மாலை பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனமும் நடைபெறுகிறது. மகரவிளக்கு பூஜைக்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே இருப்பதால் சபரிமலையில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். மகரஜோதியை தரிசிப்பதற்காக சபரிமலையை சுற்றிலும் சுமார் 5 லட்சம் பக்தர்கள் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மகரவிளக்கு பூஜைக்கு முன்னதாக நடைபெறும் பிரசித்தி பெற்ற எருமேலி பேட்டை துள்ளல் நேற்று நடந்தது. முதலில் அம்பலப்புழா குழுவினரும், பின்னர் ஆலங்காடு குழுவினரும் பேட்டை துள்ளல் நடத்தினர்.

The post எருமேலியில் பேட்டை துள்ளல் appeared first on Dinakaran.

Tags : Erumeli ,Thiruvananthapuram ,Thiruvaparanam ,Ayyappan ,Sabarimala ,Makaravilakku Puja ,Makaravilak ,Makarajyoti darshan ,Ponnambalamed ,
× RELATED திருச்சூரில் தண்ணீர் தேடி கிணற்றுக்குள் தவறி விழுந்த யானை உயிரிழப்பு..!!