கிருஷ்ணகிரி அணையில் நீர் திறப்பு

சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அணையில் இருந்து பாசனத்திற்கு நாளை முதல்நீர் திறந்துவிடப்படுகிறது. இதுகுறித்து பொதுப்பணித்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி வட்டம் கிருஷ்ணகிரி அணையில் இருந்து 2021-2022ம் ஆண்டில், கிருஷ்ணகிரி அணையின் வலது மற்றும் இடது புற பிரதான கால்வாய்களில் இரண்டாம் போக பாசனத்திற்கு 30.12.2021 முதல் 28.04.2022 வரை 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 9012 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: