மன்னார்குடி அருகே மூவாநல்லூரில் எலுமிச்சை,மாதுளை செடிகள் மானிய விலையில் விற்பனை: விவசாயிகள் பயன்பெற அழைப்பு

மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மூவாநல்லூர் கிராமத்தில் உள்ள அரசு தோட்டக்கலை பண்ணையில் எலுமிச்சை மற்றும் மாதுளை செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு மானிய விலையில் விநியோகம் துவங்கி உள்ளதாக தோட்டக்கலை துணை இயக்குனர் (பொ) இளவரசன் தெரிவித் துள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், நடப்பாண்டு திருவாரூர் மாவட்டத்தில்ஒருங் கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டம் 2021-22 திட்டத்தின்படி எழுமிச் சை 30 ஹெக்டர் மற்றும் மாதுளை செடிகள் 9 ஹெக்டர் அளவிற்கு விநியோ கிக்கும் விதமாக மூவாநல்லூர் அரசு தோட்டக்கலை பண்ணையில் உற்பத்தி செய்யப் பட்டு விவசாயிகளுக்கு மானிய விலையில் விநியோகம் செய்யப் பட்டு வருகிறது.

எலுமிச்சை, மாதுளை செடிகள் ஒரு ஹெக்டருக்கு 555 எண்களும், மாதுளை செடிகள் ஒரு ஹெக்டருக்கு 400 எண்களும் விநியோகம் செய்யப்படுகிறது. ஒரு விவசாயி 2 ஹெக்டர் வரை பயனடையலாம். இந்த மானியத்தை பெறு வதற்கு அசல் அடங்கல், சிட்டா, ஆதார் நகல் மற்றும் புகைப்படம் வழங்க வேண்டும்.தற்போது செடிகள் தயார் நிலையில் உள்ளதால் அனைத்து வட்டார விவசா யி களும் மாதுளை செடிகள் மானியத்தில் தேவைப்படுவோர் அந்தந்த வட் டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களை தொடர்பு கொண்டு செடிகளை மூவாநல்லூர் அரசு தோட்டக்கலை பண்ணையில் பெற்று கொள்ள லாம். இவ்வாறு அவர் தெரி வித் துள்ளார்.

Related Stories: