×

இந்தியாவில் ஓமிக்ரான் வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 578 ஆக அதிகரிப்பு!!

டெல்லி: இந்தியாவில் உள்ள 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 578 ஓமிக்ரான் கொரோனா வைரஸ் தொற்றுகள் பதிவாகியுள்ளன என்று ஒன்றிய சுகாதார அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. டெல்லியில் தான் மிக அதிகபட்சமாக 142 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு அடுத்ததாக மகாராஷ்டிராவில் 141 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 3-வது இடத்தில் கேரளா மாநிலத்தில் 57 பேருக்கும் குஜராத்தில் 49 பேருக்கும் ராஜஸ்தானில் 43 பேருக்கும் ஓமிக்ரான் தொற்று உறுதியாகி இருக்கிறது. தமிழகத்தில் ஓமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 34.

பிற மாநிலங்களின் ஓமிக்ரான் பாதிப்பு விவரம்: கர்நாடகா 31; மத்தியப் பிரதேசம் 9, மேற்கு வங்கம்- 6; ஹரியானா-4; ஒடிஷா-4; ஆந்திரா-6; ஜம்மு காஷ்மீர்-3; உத்தரப்பிரதேசம்-2; சண்டிகர்-3; லடாக்-1 உத்தரகாண்ட்-1. ஹிமாச்சல் பிரதேசம் -1. ஓமிக்ரான் பாதிப்பில் இருந்து இதுவரை 151 பேர் குணமடைந்துள்ளனர்.

Tags : India , ஓமிக்ரான்
× RELATED இந்தியாவில் மின்னணு வாக்கு...