×

அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி - தலைமறைவாக இருந்த எடப்பாடி உதவியாளரின் நண்பர் கைது

சென்னை: அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.1.37 கோடி மோசடி செய்த வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி உதவியாளரின் நண்பர் கைது செய்யப்பட்டுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி உதவியாளர் மணி ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் அவரது நண்பர் செல்வகுமார் கைது செய்யப்பட்டுள்ளார். 3 மாதங்களாக தலைமறைவாக இருந்த செல்வகுமாரை சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தது.

எடப்பாடி பழனிச்சாமி கடந்த 4 ஆண்டுகளாக முதல்வராக இருந்த போது அவரது தனி உதவியாளராக இருந்தவர் மணி. இவர் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள நடுப்பட்டி பகுதியை சேர்ந்தவர். மணி எடப்பாடி பழனிசாமியிடம் தனி உதவியாளராக இருந்த போது அரசு வேலை வாங்கி தருவதாக பல்வேறு நபர்களிடம் இருந்து பணத்தை வாங்கிக்கொண்டு வேலை வாங்கி தரவில்லை. இதில் மணி என்பவர் சேலம் அருகே ஓமலூர் அருகேயுள்ள செம்மாண்டப்பட்டியை சேர்ந்த செல்வகுமார் என்பவர் எடப்பாடியார் பேரவை என்ற அமைப்பை துவங்கி வைத்துக்கொண்டு எட்டப்படியுடன் ஒரு நெருங்கிய நட்புள்ளவராக செல்வகுமார் காட்டிக்கொண்டார்.

செல்வகுமாரும் எடப்பாடி பழனிச்சாமியின் உதவியாளர் மணியும் நெருங்கிய நண்பர்கள் ஆவார்கள். இந்த செல்வகுமாரின் மூலமாக தான் பல பேரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக பணத்தை பெற்றுக்கொண்டு மணி மோசடி செய்துள்ளார். இதுதொடர்பாக செல்வகுமார் ஏற்கனவே கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து ஒரு புகார் கொடுத்திருந்தார். அதாவது ரூ.1.37 கோடியை, தான் அரசு வேலை வாங்கி தருவதாக 17 நபர்களிடம் இருந்து பெற்று கொடுத்திருந்தேன். அந்த ரூ.1.37 கோடியை மணி ஏமாற்றிவிட்டார். எனவே அவரை கைது செய்து பணத்தை மீட்டு தரவேண்டும் என்று செல்வகுமார், மணி மீது புகார் கொடுத்திருந்தார். இந்த புகாரின் மீது விசாரணை நடத்திய நிலையில் நெய்வேலியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற இளம் பொறியாளர் மின்சார துறையில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 17 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.

அந்த 17 ரூபாயை பெற்றுக்கொண்ட மணி மற்றும் செல்வகுமார் அரசு வேலை வாங்கி தராமல் அவரை ஏமாற்றியுள்ளனர். இந்த நிலையில் தான் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு புகார் கொடுத்ததின் அடிப்படையில் தற்போது மணி மற்றும் அவருடைய நெருங்கிய நண்பர் செல்வகுமார் ஆகிய இருவர் மீதும் சேலம் மாவட்ட குற்றவியல் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில் அவர்களை கைது செய்ய முனையும் போது இருவரும் தலைமறைவானார்கள். இந்த நிலையில் கடந்த சில திங்களுக்கு முன்பு மணி கைது செய்யப்பட்டார். செல்வகுமாரை தொடர்ந்து தேடி வந்த நிலையில் இன்று காலை சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கொண்டலாம்பட்டி பகுதியில் செல்வகுமார் பதுங்கி இருந்த போது அவரை கைது செய்துள்ளனர்.

Tags : Edappadi , arrest
× RELATED அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்கள்: எடப்பாடி வேண்டுகோள்