×

15 வயது வித்தியாச காதல் முறிந்தது; சுஷ்மிதா - ரோஹ்மான் ‘டேட்டிங்’ ஓவர்: பாலிவுட்டில் பரபரப்பு

மும்பை: கிட்டத்தட்ட 15 வயது வித்தியாசத்தில் காதலித்து வந்த சுஷ்மிதா - ரோஹ்மான் ஜோடியின் ‘டேட்டிங்’ முடிந்துவிட்டதால் பாலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென் கடந்த இரண்டரை ஆண்டுகளாக நடிகர் ரோஹ்மானுடன் டேட்டிங் செய்து வந்தார். ரோஹ்மானுக்கும் சுஷ்மிதாவுக்கும் இடையே 15 வயது வித்தியாசம் உள்ளது. சுஷ்மிதாவுக்கு 46 வயது, ரோஹ்மான் சால்வுக்கு 30 வயது. இருவரும் ‘லிவ்-இன்’ உறவில் வாழ்ந்து வந்தனர்.

சுஷ்மிதாவின் இரண்டு மகளிடம் ரோஹ்மானுக்கு நல்ல உறவு இருந்தது. அதனால் அவர் இரண்டு பெண் குழந்தைகளின் தந்தை என்று பாலிவுட்டில் அழைக்கப்பட்டார். கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டாக காதலித்து வந்த இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக ஊடகங்களில் அடிக்கடி செய்திகள் வெளியாகின. ஆனால் தற்போது இருவரும் தங்கள் உறவை முறித்துக் கொள்ள முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரோஹ்மான் சால்வை தன்னுடைய வீட்டில் இருந்து சுஷ்மிதா சென் வெளியேற்றிவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

அதனை உறுதிப்படுத்தும் விதமாக நேற்று சுஷ்மிதா சென் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘நாங்கள் நண்பர்களாக அறிமுகமானோம். நண்பர்களாக இருந்தோம்! எங்களது உறவு  மிகவும் ஆழமானது. காதலில் இருந்து ெவளியேறியது! இனி யூகிக்க வேண்டாம். வாழ்க... வாழ விடுங்கள், பொன்னான நினைவுகள். நன்றி உன்னை நேசிக்கிறேன்!’ என்று பதிவிட்டுள்ளார். மேலும், சுஷ்மிதா சென் தனது பதிவில் #nomorespeculations #liveandletlive #cherishedmemories #gratitude #love #friendship போன்ற ஹேஷ்டேக்குகளைப் பயன்படுத்தியுள்ளார். இவர்களின் உறவு முறிந்தாலும், இருவருக்குள்ளும் காதல் குறையவில்லை என்று பாலிவுட்டில் பேசப்படுகிறது.

Tags : Sushmita - Rohman ,Bollywood , 15-year-old weird love broke up; Sushmita - Rohman ‘Dating’ Over: Sensation in Bollywood
× RELATED டீப் ஃபேக் வீடியோவால் அரசியல்...