வானியல் ஆராய்ச்சியாளர் விக்ரம் சாராபாயின் மனைவியாக நடிக்கிறார் ரெஜினா

சென்னை: இந்திய விண்வெளி திட்டத்தின் தந்தை என அழைக்கப்பட்டவர் விக்ரம் சாராபாய். இவரது மனைவி மிருணாளினி சாராபாய். இவர் பரதநாட்டிய கலைஞர். இவர்களது வாழ்க்கையை தழுவி ராக்கெட் பாய்ஸ் என்ற வெப்சீரிஸ் உருவாக உள்ளது. இதில் மிருணாளினியாக ரெஜினா நடிக்க உள்ளார். அபய் பன்னு இயக்கும் இந்த வெப்தொடர், சோனி லிவ்வில் வெளியாக உள்ளது.

இது பற்றி ரெஜினா கூறும்போது, ‘உலக அளவில் புகழ் பெற்ற ஒருவரின் வாழ்க்கையை திரையில் கொண்டு வருகிறார்கள். அந்த நபரின் வெற்றியில் அவரது மனைவியின் பங்கு பற்றியும் இதில் குறிப்பிட்டாக வேண்டும். மிருணாளினி, தேசிய அளவிலான ஒரு தவிர்க்க முடியாத கலைத்திறன் மிக்க சக்தியாக திகழ்ந்தார். அவரது வேடத்தை ஏற்பது பெருமையாக உள்ளது’ என்றார்.

Related Stories: