×

நத்தம் மலையடிவார கிராமங்களில் நெற்பயிரை சேதப்படுத்தும் காட்டுமாடுகள்-வனத்துறையினர் தடுக்க கோரிக்கை

நத்தம் : நத்தம் பகுதிகளைச் சுற்றி கரந்தமலை, மொட்டை மலை, அழகர்மலை உள்ளிட்ட பல்வேறு மலைகள்  உள்ளன. இதன் அடிவார பகுதிகளில் அனைமலைப்பட்டி, கோட்டையூர், கோட்டைப்பட்டி, காத்தாம்பட்டி, சிறுகுடி, ஒத்தினிப்பட்டி, பஞ்சையம்பட்டி, காசம்பட்டி, முளையூர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளில் உள்ள நிலங்களில் விவசாயிகள் நெல்நடவு செய்து தற்சமயம் அறுவடைக்கு தயாராகி வருகின்றன.

இந்நிலையில் அப்பகுதிகளில் காட்டு மாடுகள் மலைகளை விட்டு இறங்கி வந்து நெற் பயிர்களை சேதப்படுத்துகின்றன. இதனால் விவசாயிகள் நெற்பயிர்களை பாதுகாக்க மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். சேலைகளை வயல்வெளிகளில் உள்ள நெற்கதிர்களை சுற்றிலும் கட்டி பாதுகாக்க வேண்டியுள்ளது. இதனால் அறுவடைக்கு தயாரான போதும் நெற்பயிர்களை அறுவடை செய்யும் வரை அவற்றை வயல் வெளிகளில் பாதுகாப்பது விவசாயிகளுக்கு சவாலாக உள்ளது.

 இதுகுறித்து காத்தாம்பட்டி பகுதியை சேர்ந்த விவசாயி ஜேசு என்வர் கூறுகையில், மலையடிவார பகுதிகளில் உள்ள கிணறு மற்றும் ஆழ்குழாய் பாசனத்தின் மூலம் நெல்விவசாயம் செய்து வருகிறோம். குறைந்த அளவே நெற் பயிர்களை நடவு செய்திருந்தாலும் அவற்றை காட்டுமாடுகளின் சேதங்களிலிருந்து பாதுகாப்பது கடினமாக இருக்கிறது. தற்சமயம் இப்பகுதியில் உள்ள நெற்பயிர்கள் முற்றி அறுவடைக்கு தயாராக உள்ளன. எனவே வனத்துறை நிர்வாகம் காட்டு மாடுகள் மலையை விட்டு கீழ் இறங்கி வந்து சேதம் ஏற்படுத்துவதை தடுக்கும் பொருட்டு அவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : Natham , Natham: The Natham area is surrounded by various hills including Karandamalai, Mottaimalai and Alagarmalai. In its foothills
× RELATED தஞ்சாவூர் மாவட்டத்தில் மின்மோட்டாரை...