×

கோவில் பயிற்சி பள்ளியில் பயில்பவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கத்தொகை ரூ.3000-ஆக உயர்த்தி வழங்கப்படும் : அமைச்சர் சேகர்பாபு!!

சென்னை : கோவில் பயிற்சி பள்ளியில் பயில்பவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கத்தொகை இந்த மாதம் 3000 ரூபாய் ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் தமிழ் இசை சங்கத்தின் 79வது ஆண்டு தமிழசை விழாவில் கலந்து கொண்ட அவர், இந்த தகவலை வெளியிட்டார். கடந்த ஆட்சி காலத்தில் கோவில் பயிற்சி பள்ளிகளில் பயில்பவர்களுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்பட்டதாக கூறிய அவர், அந்த பயிற்சி பள்ளிகளில் பயிலும் அர்ச்சகர், ஓதுவார் போன்றவர்களுக்கு நடப்பு மாதம் முதல் ஊக்கத் தொகை 3000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட உள்ளதாக கூறியுள்ளார்.

இதற்கான அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் வெளியிடுவார் என்றும் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தை எதிர்த்தவர்கள் கூட வேதகிரீஸ்வரர் கோவில் பெண் ஒருவர் பாடிய பாடலை கேட்டு மயங்காதவரும் மயங்குவர் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். அந்த பெண்மணியை பாராட்டாதவர்களே இல்லை என்ற நிலையை உருவாக்கிய பெருமை தமிழ்நாடு முதல்வரையே சேரும் என்று அவர் தெரிவித்து இருக்கிறார். ஓர் அரங்கத்தில் மல்லிகை மணம் மலர வேண்டும் என்று ஒரு இசை கலைஞன் நினைத்தால் அது தனது இசையால் மல்லிகை இல்லாமலேயே மல்லிகை மணம் மலரக்கூடிய ஆற்றல் தமிழுக்கும் இசைக்கும் உள்ளது என்று சேகர்பாபு கூறியுள்ளார். 


Tags : Temple Training School ,Minister ,Sakerbabu , அமைச்சர் சேகர் பாபு
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...