×

வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்திற்கு டாக்டர் ஜெயச்சந்திரன் பெயர் வைக்க ராமதாஸ் கோரிக்கை

சென்னை: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: சென்னை ராயபுரம் பகுதியில் மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் மருத்துவ சேவை செய்து மறைந்த மக்கள் மருத்துவர் எஸ்.ஜெயச்சந்திரனின் மூன்றாவது நினைவு நாள் இன்று. இந்த நாளில் அவரது சேவையை நினைவு கூர்வோம்; அவரது நினைவை போற்றுவோம். வட சென்னை மக்களால் போற்றப்படும் மருத்துவர் ஜெயச்சந்திரனின் சேவையை அங்கீகரிக்கும் வகையில் வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்திற்கு தமிழக அரசு மருத்துவர் ஜெயச்சந்திரன் பெயரை சூட்ட வேண்டும். இவ்வாறு அந்த பதிவில் அவர் கூறியுள்ளார்.

Tags : Ramadas' ,Washermenpet ,station ,Dr. ,Jayachandran , Ramadas' request to name the Washermenpet metro station after Dr. Jayachandran
× RELATED வணிகர்கள் அவதிப்படுவதால்...