சென்னையில் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சென்னை: கேரளா மாநில செயலாளர் படுகொலையை கண்டித்து சென்னையில் எஸ்டிபிஐ கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எஸ்டிபிஐ கட்சியின் கேரள மாநிலச் செயலாளர் கே.எஸ்.ஷான் ஆலப்புழாவில் உள்ள மண்ணஞ்சேரியில் நேற்று முன்தினம் இரவு படுகொலை செய்யப்பட்டார்.  இந்த படுகொலையை கண்டித்தும், கொலையில் தொடர்புடையவர்களை கேரள அரசு கைது செய்ய வலியுறுத்தியும், தமிழகம் முழுவதும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணாசாலையில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மண்டல செயலாளர் ரசீத் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அச.உமர் பாரூக், மாநில செயலாளர் ஏ.கே.கரீம், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயலாளர் நாகூர் மீரான் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில், எஸ்.டி.பி.ஐ கட்சியின் பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: