×

மஞ்சூர்– கோவை சாலையில் யானை நடமாட்டம்: எச்சரிக்கையாக பயணிக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தல்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் இருந்து கெத்தை மலைப்பாதை வழியாக கோவைக்கு சாலை உள்ளது. இந்த சாலையானது மஞ்சூரில் இருந்து கெத்தை, வெள்ளியங்காடு, காரமடை வழியாக கோவைக்கு செல்லும் பிரதான சாலை ஆகும். தினமும் காலை, மாலை வேளைகளில் அரசு பஸ்கள் உள்பட பல்வேறு வாகனங்கள் இந்த வழியாக சென்று, வருகின்றன. மஞ்சூர்– கோவை சாலையின் இருபுறங்களிலும் அடர்ந்த வனப்பகுதி காணப்படுகிறது. இதனால் ஒரு வனப்பகுதியில் இருந்து மற்றொரு வனப்பகுதிக்கு இடம்பெயரும் வனவிலங்குகள் அந்த சாலையில் உலா வருவது வழக்கம்.

தற்போது இந்த சாலையில் இரண்டு குட்டிகளுடன் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. காலை மற்றும் சாலையிலேயே உலா வருகின்றன.  அவ்வப்போது அரசு பஸ்கள் உள்ளிட்டவற்றை மறிக்கின்றன. நேற்று இரவு கெத்தைக்கு சென்ற அரசு பஸ்சை சிறைப்பிடித்து. சிறிது நேரம் கழித்து வழிவிடவே பஸ் புறப்பட்டு சென்றது. யானைகள் நடமாட்டம் உள்ளதால் இந்த சாலையில் பயணிப்போர் எச்சரிக்கையாக பயணிக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

Tags : Gove , Elephant movement on the Manjur-Coimbatore road: Foresters advise caution
× RELATED தைவான் அதிபர் தேர்தலில் போட்டியிடும்...