×

தைவான் அதிபர் தேர்தலில் போட்டியிடும் பாக்ஸ்கான் நிறுவனர் கம்பெனி பொறுப்பில் இருந்து விலகல்

பீஜிங்: பாக்ஸ்கான் அதிபர் டெர்ரி கோவ் கம்பெனியின் இயக்குனர் குழுவில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். உலகின் மிக பெரிய தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனமான பாக்ஸ்கானின் தலைமை அலுவலகம் தைவானில் உள்ளது. பாக்ஸ்கானின் ஆப்பிள் ஐபோன் உற்பத்தி ஆலைகள் உலகெங்கும் உள்ளன. தைவான் அதிபர் தேர்தல் அடுத்தாண்டு நடக்க உள்ளது.

பாக்ஸ்கான் நிறுவனர் டெர்ரி கோவ் அதிபர் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடுவதாக சமீபத்தில் அறிவித்தார். அப்போது தைவானின் ஆளும் ஜனநாயக முற்போக்கு கட்சியை கடுமையாக விமர்சித்தார். ஆளும் கட்சியின் கொள்கைகளால் தான் தைவானுக்கும் சீனாவுக்கும் இடையே போர் ஆபத்து உருவாகியது. தைவானை உக்ரைனாக மாற்ற அனுமதிக்க மாட்டேன் என்று கூறினார். நேற்று முன்தினம் பாக்ஸ்கான் நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் இருந்து டெர்ரி கோவ் விலகினார். தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.

The post தைவான் அதிபர் தேர்தலில் போட்டியிடும் பாக்ஸ்கான் நிறுவனர் கம்பெனி பொறுப்பில் இருந்து விலகல் appeared first on Dinakaran.

Tags : Paxcon ,Taiwan ,election ,Beijing ,Terry Gove ,Dinakaran ,
× RELATED தைவானில் நள்ளிரவில் சக்தி வாய்ந்த...