×

ஆசிரியர்கள் பொது மாறுதலுக்கு வரும் 13ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்: தொடக்க கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: தொடக்கக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை, பட்டதாரி மற்றும் தலைமை ஆசிரியர்களின் பொது மாறுதல் கவுன்சலிங் குறித்த அட்டவணையை தொடக்க கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதன்படி பொதுமாறுதல் கோருவோர் 13ம் தேதி முதல் 17ம் தேதி வரை தங்கள் விண்ணப்பங்களை எமிஸ் மூலம் பதிவேற்றம் செய்ய தொடக்க கல்வித்துறை தெரிவித்துள்ளது.

பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் மற்றும் உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் கவுன்சலிங் நடத்தி வழங்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான பணியிட மாறுதல் கவுன்சலிங் தற்போது தொடங்க உள்ளது. இதையடுத்து, தொடக்க கல்வித்துறையில் செயல்படும் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்களுக்காக நடத்தப்பட உள்ள கவுன்சலிங் தொடர்பான அட்டவணையை தொடக்க கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

அது குறித்த விவரம் வருமாறு:

* பொது மாறுதலுக்கான விண்ணப்பங்களைத் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் கல்வி மேலாண்மை தகவல் முகமை (EMIS) வாயிலாக 13ம் தேதி முதல் 17 ம் தேதி வரை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

* பதிவேற்றம் செய்யப்பட்ட அனைத்து வகை ஆசிரியர்களின் மாறுதல் கோரும் விண்ணப்பங்களின் முன்னுரிமைப் பட்டியல் (Seniority List)மற்றும் காலிப்பணியிட விவரங்கள் (Vacancy List) 20ம் தேதி வெளியாகும்.

* முன்னுரிமைப் பட்டியலில் திருத்தம் மற்றும் முறையீடுகள் ஏதும் இருந்தால் 21ம் தேதி தெரிவிக்க வேண்டும்.

* மாறுதல் விண்ணப்பங்களின் இறுதி முன்னுரிமை பட்டியல் 23ம் தேதி வெளியிடப்படும்.

* 24ம் தேதி மாலை சுழற்சி மாறுதல் கவுன்சலிங் நடக்கும்.

* இடைநிலை ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கவுன்சலிங் 28ம் தேதி நடக்கும்.

* நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (ஒன்றியத்திற்குள்) 31ம் தேதியும், நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (கல்வி மாவட்டத்திற்குள்) ஜூன் 1ம் தேதி முற்பகலிலும், நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (வருவாய் மாவட்டத்திற்குள்) அதேநாளில் பிற்பகலிலும் நடக்கும்.

* ஜூன் 3ம் தேதி, நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்) நடக்கும்.

* பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (ஒன்றியத்திற்குள்) ஜூன் 6ம் தேதியும், பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (கல்வி மாவட்டத்திற்குள்) 7ம் தேதி (முற்பகல்), பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (வருவாய் மாவட்டத்திற்குள்)7ம் தேதி (பிற்பகல்),பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்)8ம் தேதியும் நடக்கும்.

* தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (ஒன்றியத்திற்குள்)-10ம் தேதி (திங்கள்), தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (கல்வி மாவட்டத்திற்குள்) ஜூன் 11ம் தேதி(முற்பகல்), தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (வருவாய் மாவட்டத்திற்குள்)11ம் தேதி (பிற்பகல்), தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்)12ம் தேதி நடக்கும்.

* இடைநிலை ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (ஒன்றியத்திற்குள்) ஜூன்13ம் தேதியும், கல்வி மாவட்டத்திற்குள்ளான கலந்தாய்வு 14ம் தேதி (முற்பகல்), மாவட்டம் விட்டு மாவட்டத்துக்கான கலந்தாய்வு 15ம் தேதியும் நடக்கும்.

The post ஆசிரியர்கள் பொது மாறுதலுக்கு வரும் 13ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்: தொடக்க கல்வித்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Primary Education Department ,CHENNAI ,Department of Elementary Education ,
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...