×

சீக்கியர், கோத்ரா கலவரங்களை விசாரித்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி நானாவதி மறைவு

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கிரிஷ் தக்கோர்லால் நானாவதி. ஜிடி.நானாவதி என்று சுருக்கமாக அழைக்கப்பட்ட இவர், 1935ம் ஆண்டு, பிப்ரவரி 17ம் தேதி குஜராத்தில் பிறந்த இவர், மும்பை உயர் நீதிமன்றத்தில் 1958ம் ஆண்டு தனது வக்கீல் பணியை தொடங்கினார். பின்னர் படிப்படியாக முன்னேறி, 1979ம் ஆண்டு குஜராத் உயர் நீதிமன்்ற நீதிபதியானார். பிறகு ஒடிசா, கர்நாடகா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றினார். கடந்த 1995ம் ஆண்டு, மார்ச் 6ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2000ம் ஆண்டு, பிப்ரவரி 16ம் தேதி ஓய்வு பெற்ற பிறகு, தனது சொந்த மாநிலமான குஜராத் சென்று வசித்து வந்தார். 86 வயதான இவர், நேற்று மதியம் மாரடைப்பால் காலமானார்.

நாட்டின் மிகப்பெரிய கலவர வழக்குகளான 1984ல் நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரம், குஜராத் மாநிலம் கோத்ராவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுபான்மையினர் கொல்லப்பட்ட கலவரம் ஆகியவை பற்றி விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தில் இடம் பெற்று, தனது அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளார்.

Tags : Supreme Court ,Nanavati , Sikh, Godhra, riot, former Supreme Court Judge, Nanavati
× RELATED மணல் குவாரி வழக்கில் தேவையில்லாமல்...