×

அடிலெய்டு டெஸ்ட்; கேப்டன் கம்மின்ஸ் விளையாட தடை.! ஆஸி. அதிரடி

அடிலெய்டு: கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்குள்ளானவருடன் தொடர்பில் இருந்ததால் ஆஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் அடி லெய்டில் இன்று நடைபெறும் போட்டியில் பங்கேற்க அந்நாட்டு கிரிக்கெட் போர்டு தடை விதித்துள்ளது. ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இன்று அடிலெய்டில் 2-வது டெஸ்ட் பகல்-இரவு போட்டியாக இன்று 9.30 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டிக்கான ஆஸ்திரேலியா அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் ஏற்கனவே காயம் காரணமாக விலகியுள்ளார். இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நபருடன் தொடர்பில் கேப்டன் பேட் கம்மின்ஸ் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு அடிலெய்டு டெஸ்டில் விளையாட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி முடிவை ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு எடுத்துள்ளது.அதே நேரத்தில் கம்மின்ஸ் மெல்போர்னில் நடைபெற இருக்கும் பாக்சிங் டே டெஸ்டில் பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Adelaide ,Captain Cummins ,Aussie , Adelaide Test; Captain Cummins banned from playing! Aussie. Action
× RELATED ஆல்-ரவுண்டர்கள் அதிகம் இருப்பது...