×
Saravana Stores

வேதா நிலையத்தை ஜெயலலிதா நினைவில்லமாக்குவதை ரத்து செய்ததை எதிர்த்து அதிமுக மேல் முறையீடு: ஐகோர்ட் அனுமதி

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தை நினைவில்லமாக மாற்றுவதற்கான நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை ரத்து செய்த தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அதிமுகவிற்கு அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் பரேஷ் உபத்யாய், சத்திகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் அதிமுக மற்றும் சி.வி.சண்முகம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.எல்.சோமயாஜி ஆஜராகி, அதிமுக ஆட்சியில் எடுக்கப்பட்ட மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவில்லம் அமைக்கும் முடிவை தனி நீதிபதி ரத்து செய்துள்ளார்.

திமுக தலைமையிலான ஆட்சிக்கு வந்ததால் மேல்முறையீடு செய்யவில்லை. அதிமுக தலைமையிலான ஆட்சியில் கொள்கை முடிவு என்ற அடிப்படையிலும், ஜெயலலிதா நினைவில்ல அறக்கட்டளை நிர்வாகி என்ற அடிப்படையிலும் மேல்முறையீடு செய்வதற்கு அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார். அப்போது, கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ள ஜெ.தீபக் தரப்பில் வழக்கறிஞர் சுதர்சனம் ஆஜராகி உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சட்டப்பூர்வமான வாரிசுகளிடம் சாவி ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதிமுக மனுவில் அடிப்படை முகாந்திரமே இல்லை. வேதா நிலையம் மீதோ, ஜெயலலிதா மீதோ அதிமுக அக்கறை கொண்டவரோ அல்லது கையகப்படுத்தும் உத்தரவால் பாதிக்கப்பட்டவரோ இல்லை. எனவே அதிமுகவை மேல் முறையீடு செய்ய அனுமதிக்கக்கூடாது என வாதிட்டார். அப்போது, நீதிபதிகள், வாரிசுகள் தொடர்ந்த வழக்கு தனி நீதிபதி முன் விசாரணைக்கு வந்தபோது ஏன் அதிமுக வழக்கில் ஒருவராக இணைவில்லை?.ஆட்சியில் இருந்ததால் வழக்கில் பங்கேற்க வேண்டாம் என நினைத்தீர்களா? ென்று கேள்வி எழுப்பினர்.

பின்னர் இருந்தபோதும் வேதா நிலையம் அல்லது ஜெயலலிதாவுடன் அதிமுக சம்பந்தப்பட்ட தரப்பு அல்ல என கூறமுடியாது. எனவே வேதா நிலையத்தை கையப்படுத்தியதை ரத்து செய்த உத்தரவை எதிர்த்து அதிமுக மேல்முறையீடு செய்ய அனுமதி அளிக்கிறோம். அதிமுக மேல்முறையீடு மனு மீது தமிழக அரசின் நிலைப்பாட்டை பிரதான வழக்கு விசாரணையின்போது தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை டிசம்பர் 20ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Tags : Jayalalitha ,Vedha Station ,Eicourt , AIADMK appeals against cancellation of Jayalalithaa's memorial service at Vedha station: ICC allowed
× RELATED சபாநாயகர் அப்பாவு மீது சிறப்பு...