×

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்கள் வெளிநாடு சென்று கல்வி பயில ரூ.5.24 கோடி ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு

சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்கள் வெளிநாடு சென்று கல்வி பயில ரூ.5.24 கோடி ஒதுக்கீடு செய்து நிர்வாக ஒப்பளிப்பு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் மணிவாசன் வெளியிட்ட அரசாணை: 2021-2022ம் நிதியாண்டின் வரவு செலவு அறிக்கையின் போது நிதித்துறை அமைச்சர், ‘ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் உயர் கல்வியைப் பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், வெளிநாட்டிற்குச் சென்று கல்வி கற்பதற்கான கல்வி உதவித்தொகை திட்டம் திருத்தியமைக்கப்படும். இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை 4 மாணவர்கள் மட்டுமே பயனடைந்துள்ளனர் என்பது வருத்தத்திற்குரியது. இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு 5 கோடி ரூபாயாக உயர்த்தப்படும் என்று அறிவித்தார்.

இந்தநிலையில், அமைச்சரின் அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக ஆதிதிராவிடர்/பழங்குடியினர் மற்றும் கிருத்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் இன மாணாக்கர்களுக்கு அயல்நாடு சென்று உயர்கல்வி பயில்வோருக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் மறுசீரமைக்கப்பட்டு TOEFL, IELTS, GRE, GMAT ஆகிய தகுதி தேர்வுகளை உள்ளடக்கிய திட்டப்படியில் ஒவ்வொரு தகுதி தேர்விற்கும் 125 மாணவர்கள் வீதம் அனைத்து தகுதி தேர்வுக்கும் 500 மாணவர்களுக்கு ரூ.1.64 கோடி செலவில் பயிற்சி வழங்கவும், மாணவர்கள் தாம் விரும்பும் நாட்டின் கல்வி நிறுவனத்தின் மேல் படிப்பினை தொடர்வதற்கு கல்வி உதவித்தொகை தோராயமாக ரூ.36 லட்சம் வீதம் பத்து மாணவர்களுக்கு ரூ.3.60 கோடி செலவினத்தில், அயல்நாடு சென்று கல்வி பயில உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்த மொத்த செலவினம் ரூ.5.24 கோடிக்கு நடப்பு ஆண்டில் நிர்வாக ஒப்பளிப்பு வழங்கி நிபந்தனைகளுடன் அரசு ஆணையிடுகிறது. அதன்படி, ஒரு குடும்பத்திற்கு ஒருமுறை மட்டுமே இக்கல்வி உதவித்தொகை வழங்கப்படும். TOEFL, IELTS, GRE, GMAT ஆகிய பயிற்சிகளில் ஒரு மாணவருக்கு ஏதேனும் ஒன்றில் பயிற்சி பெற அனுமதி அளிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Adithravidar ,Govt , Rs 5.24 crore allocated for Adithravidar and tribal students to go abroad for education: Govt.
× RELATED எந்த அறிவியல்பூர்வமான ஆய்வும்...