×

காங்கிரஸ் நிர்வாகிகளை தீவிரவாதிகளாக சித்தரித்து அறிக்கை: 2 எஸ்.ஐ சஸ்பெண்ட்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே ஆலுவாவை சேர்ந்தவர் தில்ஷா. அவரது மகள் மோபியா பர்வின் (22). சட்டகல்லூரி மாணவி. அவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் கணவன் உள்பட அவரது வீட்டினர் துன்புறுத்தி வந்துள்ளனர். இதுகுறித்து மோபியா ஆலுவா போலீசில் புகார் செய்தார். அப்போது இன்ஸ்பெக்டர் சுதீர் அவரை ஆபாசமாக திட்டி அவமானப்படுத்தியாக கூறப்படுகிறது. இதையடுத்து வீட்டிற்கு ெசன்ற மோபியா தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். தன்னுடைய இந்த முடிவுக்கு இன்ஸ்பெக்டர் சுதீர் தான் காரணம் என்று கடிதம் எழுதி வைத்திருந்தார். இதையடுத்து இன்ஸ்பெக்டரை சஸ்பெண்ட் செய்ய கோரி ஆலுவா போலீஸ் நிலைய வளாகத்தில் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஆலுவா காங்கிரஸ் எம்எல்ஏ அன்வர் சாதத் உள்பட காங்கிரஸ் தொண்டர்கள், காங்கிரஸ் மாணவர் அமைப்பினர் பங்கேற்றனர்.

அப்போது போலீசாருக்கும், காங்கிரசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ேபாலீஸ் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் போராட்டம் நடத்திய காங்கிரசார் மீது போலீசார் 4 வழக்குகளை பதிவு செய்தனர். இதில் ஒரு வழக்கில் கைதான காங்கிரஸ் மாணவர் சங்க தலைவர் அல் அமீன் அஸ்ரப், இளைஞர் காங்கிரஸ் தலைவர்களான நஜீப், அனஸ் ஆகியோருக்கு தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு உள்ளது. எனவே ஜாமீன் வழங்க கூடாது என்று போலீசார் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். காங்கிரஸ் கட்சியினரை தீவிரவாதிகளாக சித்தரித்த போலீசார் மீது நடவடிக்ைக எடுக்க கேட்டு, எம்எல்ஏ அன்வர் சாதத் முதல்வருக்கு கடிதம் அனுப்பினார். இதுகுறித்து டிஜிபி அனில்காந்த்க்கு உத்தரவிட்டார்.

இதுதொடர்பாக டிஐஜி சஞ்ஜய் குமார் விசாரணை நடத்தினார். அதில், ஜாமீன் கிடைக்க கூடாது என்பதற்காகவே தீவிரவாதிகள் என்று காங்கிரசாரை சித்தரித்தது தெரியவந்தது. இதையடுத்து ஆலுவா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினோத், உதவி சப்- இன்ஸ்பெக்டர் ராஜேஷ் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

Tags : Congress ,SI , SI, Suspended
× RELATED முன்மொழிந்தவர்களின் கையெழுத்தில்...