×

கோவை பள்ளி மாணவனை தாக்கிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சென்னை: கோவையில் பள்ளி மாணவனை தாக்கிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கோயம்புத்தூர் மாவட்டம், உதயம் கணபதி நகரைச் சேர்ந்த மாணவன். அதே பகுதியில் உள்ள சிஎம்எஸ் தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு உயிரியல் பாடப் பிரிவில் படித்து வருகிறார். மிகச் சிறந்த கால்பந்து வீரரான இவர் கோவை மாவட்ட அணிக்கு தேர்வாகி உள்ளார். மருத்துவத்தில் உள்ள ஆர்வம் காரணமாக நீட் தேர்விற்கான பயிற்சியும் எடுத்து வருகிறார்.

மாணவனுடைய சீருடை சட்டை தளர்வாக இருந்ததன் காரணமாக தளர்வாக இருந்த சட்டையை கொஞ்சம் இறுக்கமாக மாற்றி அந்த சட்டையுடன் பள்ளிக்கு சென்றுள்ளார். இதை கண்ட இயற்பியல் ஆசிரியர் அந்த மாணவனை அழைத்து சட்டை இறுக்கமாக இருப்பதற்கான காரணத்தை கேட்டதாகவும், அதற்கு மாணவன் விரிவாக பதில் அளித்தும், திருப்தி அடையாத ஆசிரியர் மாணவனை அறைந்ததோடு குனிய வைத்து சரமாரியாக தாக்கியுள்ளார். அவனது தந்தை அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். எனவே, முதலமைச்சர் இதில் உடனடியாக கவனம் செலுத்தி ஆசிரியர்களும், மாணவ - மாணவிகளும் பள்ளிகளில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து தக்க அறிவுரைகள் வழங்கி, இனி வருங்காலங்களில் இதுபோன்ற செயல்கள் நடைபெறாமல் இருக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Koo ,Pannerselvam , O. Panneerselvam urges action against teacher who attacked Coimbatore school student
× RELATED ஓபிஎஸ், டிடிவி தலையில் மண்ணை வாரி...