×

சிறை வார்டன்கள் 10 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு: தீவிர சிகிச்சையில் 200 பேர்

சேலம்:  தமிழகத்தில் 9 மத்திய சிறை உள்பட 136 சிறைகள் உள்ளன. இங்கு 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வார்டன்கள் மற்றும் அதிகாரிகள் பணியாற்றி வருகிறார்கள். சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் நீதிமன்றம் மற்றும் மருத்துவமனை தவிர வேறு இடங்களுக்கு செல்ல வாய்ப்பு இல்லை. இதையும் தாண்டி கைதிகளுக்கு வார்டன்கள் மூலமாக கொரோனா பரவுகிறது. இதையடுத்து பணிக்கு வரும் வார்டன்கள், வேலை முடிந்து வீட்டிற்கும், அங்கிருந்து வேலைக்கு மட்டுமே செல்ல வேண்டுமே தவிர தற்போதுள்ள சூழ்நிலையில் வெளியே தேவையில்லாமல் செல்லக்கூடாது என்று சிறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். சேலம் மத்திய சிறையில் பணியாற்றும் வார்டன்கள், குடியிருப்புக்குள் இருந்து வெளியே வருவதையும், உள்ளே யார் வருகிறார்கள் என்பதையும் கண்காணிக்கும் வகையில் ஆட்களை நியமித்து நோட்டில் எழுதி வருகின்றனர். இந்நிலையில், தமிழகம் முழுவதுமுள்ள சிறையில் 200க்கும் மேற்பட்ட வார்டன்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். வீட்டில் தனியாக இருந்தும் சிகிச்சை பெறுகின்றனர். இவர்களில் நேற்றுவரை 10 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். மேற்கு மண்டலத்தில் 4 பேரும், சென்னையில் 4 பேரும், மதுரை மற்றும் கடலூரில் தலா ஒருவர் என மொத்தம் 10பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் வார்டன்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது….

The post சிறை வார்டன்கள் 10 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு: தீவிர சிகிச்சையில் 200 பேர் appeared first on Dinakaran.

Tags : Corona ,Salem ,Tamil Nadu ,
× RELATED வரும் கல்வியாண்டில் மாணவர்கள்...