இந்திய-அமெரிக்கா படத்தில் ஐஸ்வர்யா ராய்

சென்னை: இந்தியா, அமெரிக்கா கூட்டுத்தயாரிப்பு படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்கிறார்.ரவீந்திரநாத் தாகூரின் 3 உமன் என்ற புத்தகத்தை தழுவி இந்த படத்தை இஷிதா கங்குலி இயக்குகிறார். படத்துக்கு இன்னும் தலைப்பு சூட்டவில்லை. இந்தியா, அமெரிக்கா கூட்டுத்தயாரிப்பில் இந்தி, ஆங்கிலம் மொழிகள் கலந்த படமாக இது உருவாக உள்ளது. இதுபற்றி இஷிதா கங்குலி கூறும்போது, ‘கொரோனா காலத்தில் இந்த படம் பற்றி ஐஸ்வர்யாவிடம் பேசினேன். அவருக்கு கதை பிடித்திருந்தது. இதில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டார். அவரைத் தவிர மேலும் இரண்டு ஹீரோயின் கேரக்டர்கள் உள்ளன. அதில் நடிப்பவர்கள் குறித்து இன்னும் முடிவாகவில்லை’ என்றார்.

Related Stories: