×

பிசி, எம்பிசி மாணவர்களுக்கு கல்வி உதவி திட்ட வருமான உச்ச வரம்பு ரூ.2.50 லட்சமாக உயர்வு: அரசாணை வெளியீடு

சென்னை: பிசி, எம்பிசி, சீர்மரபின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டங்களில் வருமான உச்ச வரம்பை ரூ.2.50 லட்சம் ஆக உயர்த்தி தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட அரசாணை: மத்திய அரசின் கல்வி உதவித்தொகை திட்டத்திற்கான பெற்றோரது ஆண்டு வருமான உச்ச வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது போல, பள்ளிப்படிப்பு மற்றும் பள்ளி மேற்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் இன மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் பல்வேறு கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கான பெற்றோரது ஆண்டு வருமான உச்ச வரம்பை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.2.50 லட்சம் ஆக உயர்த்தி வழங்கலாம்.

இதன் மூலம் கூடுதலான மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை பெற வழிவகை கிடைக்கும். மேலும் பள்ளி மேற்படிப்பு பயிலும் மாணவ, மாணவியர்களின் சதவீதம் உயரவும் பள்ளி மற்றும் கல்லூரி இடைநிற்றலை தவிர்க்கவும் வழிவகுக்கும். இதனால், கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியருக்கான பல்வேறு கல்வி உதவித்தொகை திட்டங்களில் வரையறுக்கப்பட்டுள்ள பெற்றோரது ஆண்டு வருமான உச்ச வரம்பை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.2.50 லட்சம் ஆக உயர்த்தி அரசு ஆணையிடுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : PC ,MBC , 2.50 lakh for PC and MBC students' scholarship income ceiling raised: Government
× RELATED குறும்பர் சமூகத்தினரை MBC...