×

சென்னையில் கனமழையால் மழைநீர் தேங்கியதால் 2 சுரங்கப்பாதைகளில் போக்குவரத்துக்கு தடை

சென்னை: சென்னையில் கனமழை காரணமாக தியாகராயர் நகர் மேட்லி சுரங்கப்பாதை, ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளது. கே.கே.நகர் ராஜமன்னார் சாலையில் நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது. வளசரவாக்கம் மெகா மார்ட் சாலையில் நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் சென்னையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையால் மேற்கு மாம்பலம் மீண்டும் வெள்ள நீரால் சூழப்பட்டது.

Tags : Chennai , Tunnel
× RELATED திருவல்லிக்கேணி பகுதிகளில் பைக்கில்...